Question
Download Solution PDFஇந்திய அரசியலமைப்பின் 6வது அட்டவணை பழங்குடியின பகுதிகளை நிர்வகிப்பது குறித்து விவாதிக்கின்றது. அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்கள் யாவை?
(a) அசாம்
(b) திரிபுரா
(c) மணிப்பூர்
(d) மேகாலயா
(e) சிக்கிம்
(f) மிசோரம்
(g) ஜார்க்கண்ட்
(h) நாகாலாந்து
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFசரியான பதில் (a), (b), (d), (f).
- அரசியலமைப்பின் அட்டவணைகள் :
எண் |
விவரம் |
சரத்துகள் |
முதல் அட்டவணை |
1. மாநிலங்கள் விவரம் மற்றும் அவற்றின் எல்லை பட்டியலை கொண்டுள்ளது. 2. யூனியன் பிரதேசங்கள் விவரம் மற்றும் அவற்றின் எல்லை பட்டியலை கொண்டுள்ளது |
1 மற்றும் 4 |
இரண்டாம் அட்டவணை |
ஊதியங்கள், கொடுப்பனவுகள்,சலுகைகள் மற்றும் பல: 1. இந்திய குடியரசுத் தலைவர் 2. மாநிலங்களின் ஆளுநர்கள் 3. மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் 4. மாநிலங்களவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் 5. மாநிலங்களில் உள்ள சட்டமன்றத்தின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் 6. மாநிலங்களின் சட்டமன்றா அவைகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் 7. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 8. உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் 9.இந்திய கணக்கு தணிக்கையாளர் |
59, 65, 75, 97, |
மூன்றாவது அட்டவணை |
பதவிப்பிரமாணம் அல்லது உறுதிமொழிகளின் படிவங்கள்:
1. மத்திய அமைச்சர்கள் 2. பாராளுமன்றம் தேர்தல் வேட்பாளர்கள் பாராளுமன்றம் 3. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5. இந்திய கணக்கு தணிக்கையாளர் 6. மாநில அமைச்சர்கள் 7. மாநில சட்டமன்றம் தேர்தலுக்கான வேட்பாளர்கள் 8. மாநில சட்டமன்றம் உறுப்பினர்கள் 9. உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் |
75, 84, 99, 124, 146, 173, 188 |
நான்காம் அட்டவணை |
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மாநிலங்களவையில் (ராஜ்யசபை) இட ஒதுக்கீடு |
4 மற்றும் 80 |
ஐந்தாம் அட்டவணை |
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு |
244 |
ஆறாவது அட்டவணை |
அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள பழங்குடிப் பகுதிகளின் நிர்வாக விதிகளை கொண்டுள்ளது. |
244 மற்றும் 275 |
ஏழாவது அட்டவணை |
மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் இடையேயான அதிகாரங்களின் பகிர்வு பட்டியல் I (யூனியன் பட்டியல்), பட்டியல் II (மாநில பட்டியல்) மற்றும் பட்டியல் III (பொது பட்டியல்). தற்போது, யூனியன் பட்டியலில் 98 துறைகள் (தொடக்கத்தில் 97), மாநில பட்டியலில் 59 துறைகள் (தொடக்கத்தில் 66), பொதுப் பட்டியலில் 52 துறைகள் (தொடக்கத்தில் 47) உள்ளன. . |
246 |
Eighth |
அரசியலமைப்பு. தொடக்கத்தில் 14 மொழிகள் இருந்தன. தற்பொழுது 22 மொழிகள் உள்ளன. அவை: அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி (டோங்ரி), குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மாத்திலி (மைதிலி), மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது. சிந்தி மொழி 1967 ஆம் ஆண்டு 21 வது திருத்தச் சட்டத்தால் சேர்க்கப்பட்டது. கொங்கனி, மணிபுரி மற்றும் நேபாளி 1992-இல் 71 திருத்த சட்டத்தில் சேர்க்கப்பட்டது. மற்றும் போடோ, டோங்ரி, மைதிலி மற்றும் சாந்தாலி ஆகியவை 2003-இல் 92வது திருத்த சட்டத்தால் சேர்க்கப்பட்டன. ஒரியா என்பது 2011 இன் 96 வது திருத்தச் சட்டத்தால் ‘ஓடியா’ என மறுபெயரிடப்பட்டது |
344 மற்றும் 351 |
ஒன்பதாவது அட்டவணை |
சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் (முதலில் 13 ஆனால் தற்போது 282) 32 மாநிலங்கள் நிலத்தை கையாளும் சட்டமன்ற சீர்திருத்தங்கள் மற்றும் ஜமீன்தாரி அமைப்பு ஒழிப்பு மற்றும் மற்றவை பாராளுமன்றம் கையாளும் சட்டங்கள் ஆகும் இந்த அட்டவணை 1வது திருத்த சட்டம் (1951) மூலம் சேர்க்கப்பட்டுள்ளது, இது, அடிப்படை உரிமைகளை மீறும் சட்டங்களை நீதித்துறை ஆய்வில் இருந்து பாதுகாக்கிறது. இருப்பினும் ஏப்ரல் 24-க்குப் பிறகு இந்த அட்டவணையில சேர்க்கப்பட்ட சட்டங்கள் நீதித்துறையின் ஆய்வுக்கு உட்பட்டவை என 2007-இல் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
31 - B |
பத்தாவது அட்டவணை |
பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித்தாவலில் ஈடுபட்டால் அவர்களின் பதவி நீக்கம் குறித்து இது விவரிக்கின்றது. இது 1985 ஆம் ஆண்டு 52 வது திருத்த சட்டம் மூலம் சேர்க்கப்பட்டது. இது கட்சித்தாவல் தடை சட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. |
102 மற்றும் 191 |
பதினொறாவது அட்டவணை |
பஞ்சாயத்தின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை விவரிக்கின்றது. இதில் 29 குறிப்புகள் உள்ளன. இந்த அட்ட்வணை 73வது திருத்த சட்டம். 1992 மூலம் சேர்க்கப்பட்டது. |
243 - G |
பன்னிரெண்டாவது அட்டவணை |
நகராட்சிகளின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை விவரிக்கின்றது. இதில் 18 குறிப்புகள் உள்ளன. இந்த அட்ட்வணை 74வது திருத்த சட்டம். 1992 மூலம் சேர்க்கப்பட்டது. |
243 - W |
Last updated on Jul 3, 2025
-> MPSC Prelims Exam will be held on 28 September.
-> MPSC has extended the date for online application fee payment. Candidates can now pay the fees online till 23 April, 2025.
-> The revised exam dates for the MPSC mains exam were announced. The State services main examination 2024 will be held on 27th, 28th & 29th May 2025 as per the revised schedule.
-> MPSC State service 2025 notification has been released for 385 vacancies.
-> Candidates will be able to apply online from 28 March 2025 till 17 April 2025 for MPSC State service recruitment 2025.
-> Selection of the candidates is based on their performance in the prelims exam, mains exam and interview.
-> Prepare for the exam using the MPSC State Services Previous Year Papers.
-> Also, attempt the MPSC State Services Mock Test to score better.
-> Stay updated with daily current affairs for UPSC.